0 Comments
Published on: Thursday, August 13th, 2020 at 10:52 PM
முகக்கவசம் அணியாமல் மோடியுடன் உரசி நின்ற கோபால்தாசுக்கு கொரோனா…
ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அறக்கட்டளையின் தலைவர் நிரித்ய கோபால்தாசுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், பிரதமர் மோடியும் தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அறக்கட்டளையின் தலைவரான நிரித்ய கோபால்தாசும் மேடையில் பிரதமர் மோடியுடன் அமர்ந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சி முழுவதும் பிரதமர் மோடிக்கு நெருக்கமாகவே முகக்கவசம் கூட அணியாமல் கோபால்தாஸ் வலம் வந்த நிலையில், அண்மையில் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் கோபால்தாசுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபால்தாசுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்துதரும்படி மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம்தான் அவர் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மோடி அவ்வாறு தனிமைப்படுத்திக் கொண்டால், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது.
No comments yet