Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தர்பார் விமர்சனம் – ரசிகர்களுக்கான விருந்து படைத்த ரஜினி…

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 12:38 PM

மும்பையில் காவல்துறை மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. இதனால் அங்கு பணியில் இருக்கும் போலீசார், வேலையை விட்டு விட்டு, வேறு பணிகளுக்கு செல்லலாம் என முடிவு செய்கின்றனர். இந்த சூழலில்தான், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆன ரஜினி, மும்பை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்கிறார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் ரஜினி, போதை மருந்து மாஃபியாவில் இயங்கும் பல பெண்களை காப்பாற்றுகிறார். அதில் ஒரு அரசியல் பிரபலத்தின் மகனையும் காப்பாற்றுகிறார் ரஜினி. பல இடங்களில் சட்டத்தை மீறி நடவடிக்கை எடுக்கும் ரஜினியை மக்கள் பாராட்டுகின்றனர்.

போதை மருந்து மாஃபியா கட்டுப்பாட்டில் இருந்த மும்பை நகரத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் ரஜினி. போதை மருந்து மாஃபியாவை ஒழித்துக்கட்ட நினைக்கும் ரஜினி, தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டறிகிறார். தடைகளை தாண்டி அவரை கைது செய்யும் ரஜினி, பல இடைஞ்சல்கள் காரணமாக அவரை போட்டுத் தள்ளுகிறார்.

இதுவரை வழக்கமான வேகத்தில் செல்லும் படம், தொழிலதிபரின் மகன் கொலைக்குப் பிறகு ஜெட் வேகம் எடுக்கிறது. கொல்லப்பட்டவரின் தந்தை உலகளவில் போதை மருந்து கடத்தல் மன்னன் சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரியவருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பும் சுனில் ஷெட்டி, ரஜினியையும், அவரது மகள் நிவேதா தாமஸையும் குறிவைக்கிறார். ஹீரோ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே, வில்லனை ரொம்ப சொத்தையாக காண்பித்து இருக்கிறார்கள்.

படம் முழுக்க ரஜினியின் படமாகவே இருக்கிறது. தனக்கே உரித்தான ஸ்டைல், வசனம் என புது ரஜினியை படம் முழுக்க பார்க்க முடிகிறது. காலா, பேட்ட என தொடர்ந்து வயதான கெட்டப்புகளில் வந்த ரஜினி, இந்த படத்தில் கொஞ்சம் இளமையாக தெரிகிறார். ஆனாலும், அவரது உண்மையான வயது திரையில் தெரிந்து விடுகிறது.

இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு பெரிய அளவில் இடமில்லை. அவரை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை. ரஜினியும், நயன் தாராவும் ஒன்றாக இருக்கும் காட்சியில், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் அப்பட்டமாக தெரிகிறது. ரஜினியின் மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸ் கொஞ்சம் ஈர்க்கிறார்.

யோகிபாபுவின் காமெடி, அனிருத்தின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. சும்மா கிழி, கண்ணுல திமிரு பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்து. ரயில் நிலைய சண்டை காட்சி பிரமிக்க வைக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை சாதாரண ரசிகன் கூட கணிக்க முடியும் அளவிற்கு திரைக்கதை ரொம்ப வீக். முதல் பாதியில் ஜெட் வேகத்தில் சென்ற கதை, இரண்டாம் பாதியில் ரசிகர்களை கொட்டாவி விட வைக்கிறது. படத்தை காப்பாற்றுவது ரஜினியும், யோகிபாபுவும் தான்.

முழுக்க முழுக்க ரஜினிக்கான படமாகவே இருக்கிறது. ரசிகர்களுக்கான படம்… தர்பார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet