Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையிலும் மழை பெய்யும்… உங்கள் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறையா..?

0 Comments

Published on: Tuesday, December 3rd, 2019 at 8:04 PM

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவித்தார். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 செ.மீ. மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறினார். சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த அவர், குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் கூறினார்.

சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பை விட 13 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.

4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை 7ஆம் தேதிக்குப் பிறகே பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet