Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறப்பு ரயில்களுக்கு கவுண்டர்களிலேயே முன்பதிவு… எப்போது?

0 Comments

Published on: Thursday, May 21st, 2020 at 9:10 PM

சிறப்பு ரயில்களுக்கு கவுண்டர்களிலேயே முன்பதிவு… எப்போது?

ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, நாளை முதல்  பொது சேவை மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, ஜூன் 1ஆம் தேதி முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்தது. அதற்கான முன்பதிவை ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும் எனக் கூறிய மத்திய அரசு, நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களிலும் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

அடுத்த ஓரிரு நாட்களில் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலும் முன்பதிவு வசதி தொடங்கப்படும் என்றும், ஜூன் 1ஆம் தேதி புறப்படும் ரயில்களுக்கு இன்றே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இருப்பினும், ஜூன் 1 முதல் மத்திய அரசு அறிவித்துள்ள 200 சிறப்பு ரயில்களில், தமிழகத்திற்கு ஒரு ரயில் கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet