Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயம் – எங்கே சென்றார்?

0 Comments

Published on: Monday, December 16th, 2019 at 4:24 PM

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் காணாமல்  போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நாட்டுப்புற பாடகரும், திரைப்பட பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி. தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் பல்லவி மருத்துவருக்கு படித்து வருகிறார்.

இந்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், பல்லவி காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார். சகோதரிக்கும் அவருக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. அதனால் கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றவர். பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அபிராமபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் காணாமல் போன பல்லவியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet