Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“வடிவேலு மோசடி செய்துவிட்டார்” எலி பட தயாரிப்பாளர் பகீர்…

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 11:26 AM

நகைச்சுவை நடிகர் வடிவேலு, தன்னிடம் ரூ.10 கோடி மோசடி செய்துவிட்டதாக, எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் தயாரிப்பாளர் கூறிய புகாரால்,  திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்த எலி திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. தெனாலி ராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன், எலி படத்தை இயக்கியதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி, எதிர்பார்ப்பு பொய்யாகி போனதால், படம் தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலை நடிக்க வைத்ததால், 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்த்திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சனை ஆகி பாதியில் நிற்கிறது. என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் சென்று தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக வடிவேலு கூறினார். ஆனால், சொன்னதை செய்யவில்லை.

சம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன். நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறியுள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன். அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன். தற்போது நடிகர் வலுவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர் என சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet