Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

2வது திருமணம் செய்த இளம்பெண் கொடூர கொலை – செல்போன் சிக்னலால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்..!

0 Comments

Published on: Saturday, December 21st, 2019 at 9:10 AM

ஆம்பூர் அருகே செல்போனுக்கு சிக்னல் தேடிச் சென்ற கர்ப்பிணி கொலை செய்யப்பட்டு, காட்டுப்பகுதியில் வீசப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சுட்டக்குண்டா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (23). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோர் இறந்துவிட்டதால் பாட்டி வீட்டில் வசித்து வந்த இவருக்கு, 18 வயதிலேயே போச்சம்பள்ளியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அந்த நபருக்கு 40 வயது என்பதால், வாழப்பிடிக்காமல் பாட்டி வீட்டுக்கே திரும்பி வந்துவிட்ட ரேவதியை, ஒரு ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் அருகே போடிப்பாடியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞர் பெண் கேட்டுள்ளார்.

ஜெயக்குமார் பார்க்க அழகாக இல்லை என ரேவதி நிராகரித்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு பேரணாம்பேட் அடுத்த மசிகம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். மகேஸ்வரன் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால், திருமணம் முடிந்த கையோடு, ரேவதியும் ஓசூருக்கு சென்றுவிட்டார்.

தற்போது ரேவதி 2 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், சொந்த ஊருக்குச் சென்று பாட்டி மற்றும் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என கணவரிடம் கூறியுள்ளார். அவரது ஆசைக்காக சுட்டக்குண்டாவுக்கு, கடந்த 14ஆம் தேதி ரேவதியுடன் வந்த மகேஸ்வரன், 2 நாட்களுக்கு பிறகு ஓசூருக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

கடந்த புதன் கிழமை மதியம் கணவர் மகேஸ்வரனுடன் செல்போனில் பேச முயற்சித்துள்ளார் ரேவதி. சுட்டகுண்டா பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காது என்பதால், சிக்னல் கிடைக்கும் பகுதிக்குச் சென்று பேசிவிட்டு வருவதாக வெளியே சென்றார். வெகுநேரமாகியும் ரேவதி வீட்டுக்குத் திரும்பி வராததால், பல இடங்களில் இரவு முழுவதும் உறவினர்களும், பொதுமக்களும் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால், காலையில் வனப்பகுதிக்குச் சென்றபோது, அங்கு துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு, ரேவதி சடலமாக கிடந்தார். இதைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், ரேவதியின் கழுத்தில் ரத்த காயங்கள் இருப்பது குறித்தும், அவர் அணிந்திருந்த 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது பற்றியும் போலீசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் முதல் கணவர் அல்லது ஏற்கெனவே பெண் கேட்டுச் சென்றவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

ரேவதி மாயமாவதற்கு முன்பு, ஜெயக்குமாருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறும் பொதுமக்கள், இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால், அவரை கிடுக்கிப்பிடிப் போட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet