Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறுநீரகத்தில் கல்லா…? ஆபரேசன் தேவையில்லை… இதை செய்தால் 3 நாளில் தீர்வு..!

0 Comments

Published on: Wednesday, August 12th, 2020 at 1:07 PM

சிறுநீரகத்தில் கல்லா…? ஆபரேசன் தேவையில்லை… இதை செய்தால் 3 நாளில் தீர்வு..!

சிறுநீரகத்தில் கல் இருந்தால் வயிறு வலியால் துடிப்பவர்கள் அறுவைச் சிகிச்சை இல்லாமலே, 3 நாட்களில் கல்லை கரைத்து விட முடியும்.

நாகரீகமும், விஞ்ஞானமும் என்னதான் வளர்ச்சியடைந்தாலும், நமது பாரம்பரியத்திற்கு என்றுமே ஈடுகொடுக்க முடியாது. அதிலும் மருத்துவத்தில் நம் முன்னோர்களை அறிவுச் சுரங்கம் என்றே சொல்லலாம். இன்றைய நாளில் சிறுநீரகக் கல் பலரையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இந்த பிரச்சனையோடு மருத்துவர்களை சந்தித்தால், அவர்கள் முதலில் கூறுவது அறுவைச் சிகிச்சைதான். ஆனால், ஆபரேசன் செய்யாமலேயே நமது பாரம்பரிய முறைப்படி, சிறுநீரகக் கல்லை வெளியேற்றிவிடலாம். அதிலும், சிறுநீரகத்தில் 8 மில்லி மீட்டர் அளவுள்ள கல்லைக் கூட 3 நாட்களில் கரைத்து விடலாம். இதை செய்து பாருங்கள். நீங்களே உண்மையை உணர்வீர்கள்.

பொங்கல் திருநாளில் வீட்டு வாசல்களில் தோரணம் கட்ட பயன்படும் பூளைப்பூவை, சூடான தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். சுண்டக் காய்ச்சியதும், அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தாலே சிறுநீரகக் கல்லால் ஏற்படும் வயிற்று வலி பறந்துபோகும்.

இதுவரை இந்த பிரச்சனையை சந்திக்காதவர்கள், எதிர்காலத்திலும் சிறுநீரகக் கல் வருவதை தவிர்க்க, வாரத்திற்கு ஒருமுறை பூளைப்பூவை கொதிக்க வைத்து, அதை வடிகட்டி கருப்பட்டி போட்டு டீ போல குடித்துவந்தாலும் சிறுநீரகக் கல் வராமல் தடுக்கலாம். அதேபோல், வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலும், உங்களுக்கு எப்போதும் சிறுநீரகக் கல்லே வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet