Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நம்ப முடியவில்லை… உயிர்த் தியாகம்… அயோத்தியில் பிரதமர் மோடி உரை…

0 Comments

Published on: Wednesday, August 5th, 2020 at 9:39 PM

நம்ப முடியவில்லை… உயிர்த் தியாகம்… அயோத்தியில் பிரதமர் மோடி உரை…

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் தேசத்தின் ஒற்றுமைக்கு பாலமாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின், ராமர் கோயில் கல்வெட்டை திறந்து வைத்து, அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார்.

இந்தியர்களின் தியாகம், போராட்டங்களால் ராமர் கோயில் எனும் கனவு நினைவாகி இருப்பதாகவும், இப்படி ஒரு நன்நாள் வந்ததை பலராலும் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதியை யாராலும் மறக்க முடியாது என்ற அவர், ராமர் கோயிலுக்காக பல தலைமுறை உயிர்த் தியாகம் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

வேண்டுதல்களுக்கு பதில் கிடைத்துள்ளதாகவும், போராட்டங்களுக்கு முடிவு கிடைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet