Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சென்னைக்கு மிக அருகில்…!

0 Comments

Published on: Thursday, December 26th, 2019 at 8:32 PM

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஒழலூர் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஒழலூர் ஈசா ஏரியில் வீட்டுமனை பிரிவுகள் அமைத்து மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழையால் ஏரியில் நீர் நிரம்பி உள்ளது, எனினும் அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை, இந்த வீட்டு மனை பிரிவுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், ஊடக வாயிலாகவும், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எதிர்கால தலைமுறையினரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகமான நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய ஏரியை தனிநபரின் சுயநலத்திற்காக வீட்டு மனை பிரிவுகள் அமைத்து விற்பனை செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet