Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பேடிஎம் கட்டணம் வசூல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 11:51 AM

டிஜிட்டல் இந்தியா என்ற வார்த்தைக்குப் பிறகு வங்கி நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. அத்துடன் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களும் அதிகரித்து விட்டன. அதில் ஒன்றான பேடிஎம் நம்மில் பலரும் பயன்படுத்தும் முக்கியமான ஆப். தற்போது பேடிஎம் நிறுவனம், கிரெடிட் கார்டு மூலமாக தங்கள் இ- வேலட்டில் ஒரு மாதத்தில் ரூ.10,000க்கு மேல் போடும் பயனர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

மாதத்தில் எந்த கிரெடிட் கார்டு மூலமாகவும் ரூ .10,000 க்கு மேல் இ- வேலட்டில் சேர்த்தால் 1.75% + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று பேடிஎம்-ன் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது. இருப்பினும், டெபிட் கார்டுகள், யுபிஐ போன்ற பிற சேனல்கள் மூலம் இ-வேலட் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியாது என்பதால், அதை பேடிஎம்மில் சேர்த்து, அதன்பிறகு அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இந்த புதிய கட்டணத்தால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet