Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை – 175 பேருக்கு அழைப்பு…

0 Comments

Published on: Tuesday, August 4th, 2020 at 5:23 PM

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை – 175 பேருக்கு அழைப்பு…

அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 90 வயதை கடந்த பிரமுகர்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet