Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அந்த பேய் சாக கூப்புடுது… தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி… திண்டுக்கல்லை அதிரவைத்த கடிதம்…

0 Comments

Published on: Friday, July 17th, 2020 at 10:27 PM

அந்த பேய் சாக கூப்புடுது… தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி… திண்டுக்கல்லை அதிரவைத்த கடிதம்…

நர்சிங் மாணவி ஒருவர் தனது தற்கொலைக்கு பேய் தான் காரணம் என எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் உறவினர்கள், கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மூத்த மகள் லத்திகா கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தற்போது கொரோனா காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய லத்திகா அதன்பின் எவரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், தடயங்களை சேகரித்தபோது, லத்திகாவின் அறையில் பென்சிலால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில் லத்திகா திடுக்கிடும் தகவல்களை எழுதி வைத்துள்ளார். பேய் ஒன்று தன்னை அடிக்கடி பயமுறுத்துவதாகவும், அதனால் இரவில் தூக்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்த பேய் தன்னை சாக வருமாறு அழைப்பதாகவும், இதை வெளியில் சொன்னால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவதாக அந்த பேய் மிரட்டுவதாக எழுதியுள்ளார்.

தான் தற்கொலை செய்யவில்லை என்றால், குடும்பத்தை அழித்துவிடுவேன் என மிரட்டுவதால், தானே உயிரை மாய்த்துக்கொள்வதாக எழுதியுள்ளார். குடும்பத்தை வசியம் செய்ய யாரோ முயற்சி செய்வதாகவும், அதனால் தான் பயன்படுத்திய எந்த பொருளையும் வீட்டில் வைக்க வேண்டாம் என லத்திகா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். எல்லாம் நன்மைக்கே, அப்பா, அம்மாவை நன்றாக பாத்துக்கொள்ளுமாறு தம்பி, தங்கைக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இறுதியில் லவ் யூ மை ஃபேமிலி என்று அந்த கடிதத்தில் லத்திகா பென்சிலால் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், லத்திகாதான் இந்த கடிதத்தை எழுதினாரா என்றும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் நர்சிங் மாணவி லத்திகா பயன்படுத்திய செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet