Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ட்ரூகாலரில் நம்பர் எடுத்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் – சென்னையில் சிக்கிய நெல்லை இளைஞர்..!

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 7:06 PM

நாட்றம்பள்ளி அருகே இளம்பெண்களுக்கு செல்போனில் இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கு செல்போன் ட்ருகாலர் மூலம் செல் நம்பரை எடுத்து நாளுக்கு நாள் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறை ஆய்வாளர் இருதயராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து செல் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் முள்ளிகுளம் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் வினோத் (24) வயது என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என தெரிய வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலிசார் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அப்போது அவர் பல பெண்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படங்களையும் அனுப்பி வைத்துள்ளது அம்பலமானது.

மேலும் இதுபோன்ற பெண்களிடம் நைசாக பேசி அவர்களிடம் ஆபாச படங்களை அனுப்பிய பின்னர் அவர்கள் குளிக்கும் நிர்வாண வீடியோவை பதிவு செய்து வாங்கி அவர்களுக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப் படுகின்றன

இதுபோன்று பல பெண்களை தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளதாக தெரியவந்துள்ளது

பெண்கள் செல்போன் மோகத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இதுபோன்ற இளைஞர்களிடம் சிக்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலைக்கு முயன்று வருவதாக போலீசார் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet