Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை – லாட்ஜில் உல்லாசமாக இருந்தபோது மடக்கிப் பிடித்த போலீஸ்…

0 Comments

Published on: Tuesday, August 4th, 2020 at 8:36 PM

பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை – லாட்ஜில் உல்லாசமாக இருந்தபோது மடக்கிப் பிடித்த போலீஸ்

மதுரை சிறுமிக்கு பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த இளைஞரை, திண்டுக்கல் லாட்ஜில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் 22 வயதான ஷபின். பேஸ்புக்கில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பேஸ்புக்கில் சிறுமிகளை நோட்டமிட்டு, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி தூண்டில் போடுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார். இவரது தூண்டிலில் மதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அண்மையில் சிக்கியுள்ளார்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கும் ஷபின், பேஸ்புக் மூலம் தனது காதலை வெளிப்படுத்தி, சாட்டிங் மூலம் அந்த சிறுமிக்கு பாலியல் எண்ணத்தை உருவாக்கியுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிறுமியை மூளைச் சலவை செய்து வெளியூருக்கு அழைத்து செல்ல திட்டம் தீட்டியுள்ளார். சிறுமியை ஓரிடத்திற்கு வரச் சொல்லிவிட்டு, நத்தத்தில் இருந்து பைக் மூலம் மதுரைச் சென்று, சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளார்.

சிறுமியை காணாத அவரது பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஷபினின் செல்போன் எண்ணை வைத்து அவரை பின் தொடர தொடங்கினர். முதலில் பொள்ளாச்சியில் அவர்கள் இருப்பது தெரிந்து, அங்கு சென்ற போது, அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்துவிட்டனர்.

செல்போன் சிக்னல் மூலம் திண்டுக்கல் வந்த தனிப்படையினர், அங்குள்ள லாட்ஜில் சிறுமி உடன் இருந்த ஷபினை கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களிடம் விசாரித்ததில், வெளியூர்களுக்கு வர மறுத்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஷபின் அழைத்து சென்றதும், மதுரையிலிருந்து பைக்கிலேயே பொள்ளாச்சி, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று, ஊரடங்கு காலத்திலும் ஊர் சுற்றியதும், தடைகளை மீறி லாட்ஜ்களில் கூடுதல் பணம் கொடுத்து தங்கியதும் தெரியவந்தது.

லாட்ஜ்களில் தங்கியபோது, சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், ஷபினை போக்சோ சட்டத்தில்  கைது செய்தனர். மேலும், சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet