Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“எப்போ போன் பண்ணுனாலும் பிஸி… நர்மதா இப்படி ஆனதற்கு அந்த எஸ்.ஐ.தான் காரணம்…”

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 3:13 PM

எஸ்.ஐ. ராஜேஷ் தனது மனைவியை அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்த ஜானர்த்தனன், நர்மதா குறித்து மேலும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். எப்போ போன் பண்ணுனாலும் நர்மதா செல்போன் பிஸியாகவே இருக்கும். பல முறைக்கு பிறகு ரிங் போனாலும் என் போனை எடுக்கவே மாட்டார், அதற்கு அந்த எஸ்.ஐ. தான் காரணம் என ஜனார்த்தனன் புலம்புகிறார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன் – நர்மதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதை தனது மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, துபாய் சென்று வேலைபார்த்துள்ளார் ஜனார்த்தனன்.

பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஜனார்த்தனன் அதை தனது மனைவிக்கு அனுப்பி வைத்த நிலையில், மாமியார் வீட்டில் இருக்க முடியாத நர்மதா, துபாயில் இருக்கும் தனது கணவரிடம் சொல்லிவிட்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.

அதன்பிறகு பலமுறை ஜனார்த்தனன் போன் செய்யும்போதெல்லாம், பெரும்பாலும் நர்மதா செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. பகலில் நிறுவனம் தொடர்பாக யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார் என கருதிய ஜனார்த்தனன், இரவு நேரத்தில் போன் செய்தால், அதை நர்மதா எடுப்பதில்லை என்கிறார் ஜனார்த்தனன்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ஜனார்த்தனன், நர்மதாவிடம் தான் அனுப்பிய பணம், செய்த செலவு, நிறுவனத்தின் மூலம் வந்த வருமானம் ஆகியவை குறித்து கணக்கு கேட்டுள்ளார். ஆனால், சரிவர கணக்கு சொல்லாத நர்மதா, ஜனார்த்தனன் உடன் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.

பிள்ளைகளிடம் விசாரித்தபோது, வேறு ஒருநபர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நர்மதாவுக்கு தெரியாமல், அவரை பின் தொடர்ந்துள்ளார் ஜனார்த்தனன். அப்போது ஓரிடத்தில் திருநின்றவூர் உதவி ஆய்வாளர் ராஜேஷ் உடன் மிக நெருக்கமாக நர்மதா பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜனார்த்தனன், அதை போட்டோ எடுத்த பிறகு இருவரையும் கையும் களவுமாக பிடித்து சண்டை போட்டுள்ளார்.

அப்போது  எஸ்.ஐ. ராஜேஷும், நர்மதாவும் ஜனார்த்தனை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த ஜனார்த்தனன், துபாயில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தை எஸ்.ஐ. உடன் உல்லாசமாக இருப்பதற்காக, செலவழித்துவிட்டதாகவும், தனது பல கோடி சொத்துகளை நர்மதா மோசடி செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான கள்ள உறவு தெரிய வந்ததற்கு பிறகு, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் ஜனார்த்தனன் கூறியுள்ளார். ஆனால், இதை மறுத்துள்ள நர்மதா, மாமியார் வீட்டில் அதிகளவு டார்ச்சர் இருந்ததால், அதற்கு உதவி கேட்பதற்காகவே எஸ்.ஐ. ராஜேஷை அணுகியதாகவும், ஆனால், கள்ளத் தொடர்பு என தனது கணவர் அபாண்டமாக பழி சுமத்துவதாகவும் நர்மதா விளக்கம் அளித்துள்ளார்.

உண்மை என்ன என்பது காவல்துறையின் விசாரணையில்தான் தெரியவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet