Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முதல் வெற்றி பெற்ற நாம் தமிழர் கட்சி – தனித்த களம் தொடருமா?

0 Comments

Published on: Saturday, January 4th, 2020 at 1:39 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக,  அதிமுக போன்ற கட்சிகள் பதவிகளை அள்ளிவிட, ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி, தேர்தல் அரசியலில் முதன் முறையாக வெற்றியை சுவைத்துள்ளது நாம் தமிழர் கட்சி.

தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகள் நாங்கள்… என மேடைக்கு மேடை முழங்கி வரும் சீமான், தொடக்க முதலே யாருடன் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. அவற்றில் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி எதுவும் கிடைக்காவிட்டாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக வைத்துள்ளார்.

அவரது பேச்சைக் கேட்க கூட்டம் அதிகரிப்பது வழக்கம் என்பதால், உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று, அடித்தளத்தில் நாம் தமிழர் கட்சி கிளை பரப்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11ம் வார்டு உறுப்பினராக, நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி வாகை சூடியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட, 218 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வசமாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்து சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றதே தவிர, வெற்றியை சுவைத்ததில்லை. இந்த ஊராக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

2010ம் ஆண்டு சீமானால் தொடங்கப்பட்ட இந்த கட்சி, 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்கி, ஒன்று புள்ளி 1 சதவீத வாக்குகளை பெற்றது. அதனை தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் 5 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இனி வரும் தேர்தல்களில் இந்த வெற்றி கணக்கு அதிகரிக்குமா? என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet