Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்… குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்..!

0 Comments

Published on: Friday, July 17th, 2020 at 10:10 PM

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்… குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்..!

சிவகங்கையில் வாடகை வீட்டை உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால்,  2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே அதப்படக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன் – காளீஸ்வரி தம்பதி. பாலமுருகன் மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி காளீஸ்வரி, 12 வயது மகள் மங்கையர்கரசி, 9 வயது அபிஷேக் உடன் சிவகங்கையில் வசித்து வந்தார்.

பிள்ளைகளின் பள்ளிப் படிப்பிற்காக சிவகங்கை குறிஞ்சி நகரில் மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு வீடு பிடித்து காளீஸ்வரி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. இதனால். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காளீஸ்வரி தூக்கிட்ட நிலையிலும், பிள்ளைகள் இரண்டும் விஷம் குடித்த நிலையிலும் உயிரிழந்து கிடந்தனர்.

மேலும் சுவரில் தனது சாவுக்கு வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன், அவரது அக்கா நாகஜோதி, அவரது அம்மா சுந்தரிதான் காரணம் என எழுதி வைத்து இருந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற சிவகங்கை போலீசார் மூவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்த நிலையில், ஒத்தி முடியும் முன்பே காலி செய்யக்கூறி  வீட்டின் உரிமையாளர் மிரட்டியது தெரியவந்தது. பலமுறை கெஞ்சியும் வீட்டு உரிமையாளர் ஏற்காததால் மனமுடைந்த காளீஸ்வரி, வியாழக்கிழமை 2 பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை முன்கூட்டியே காலி செய்யச் சொன்னதற்காக காளீஸ்வரி ஏன் பிள்ளைகளைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? வீட்டு உரிமையாளரின் தொந்தரவு குறித்து கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet