Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

குஞ்சுகளைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டை போட்ட தாய்க் கோழி – சிலிர்ப்பூட்டும் வீடியோ…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 10:10 PM

குஞ்சுகளைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டை போட்ட தாய்க் கோழிசிலிர்ப்பூட்டும் வீடியோ

நாகப்பாம்பிடம் இருந்து குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக தாய்க்கோழி ஒன்று ஆக்ரோசமாக சண்டையிடும் காட்சி, பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பூட்டுகிறது.

வனவிலங்குகள் தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வரும் இந்திய வனப்பணி அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர், அண்மையில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், கோழி தனது குஞ்சுகளுடன் இருக்கும் பகுதிக்கு நாகப்பாம்பு ஒன்று வருகிறது. அதை பார்த்ததும் பதறிப்போன தாய்க் கோழி, தனது குஞ்சுகளை பறிகொடுத்து விடாமல் பாதுகாப்பதற்காக, நாகப்பாம்புடன் ஆக்ரோசமாக சண்டையிடுகிறது.

பாம்பு என்னதான் முயற்சித்தாலும், கோழிக் குஞ்சுகளை ஒன்றும் செய்துவிட முடியாத வகையில் தனது எதிர்ப்பை காட்டும் தாய்க் கோழி, அனைத்து குஞ்சுகளையும் அங்கிருந்து காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் செல்கிறது.

இந்த வீடியோவை பார்க்கும்போது மிகவும் சிலிர்ப்பூட்டுவதாக தெரிவிக்கும் பலர், இதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet