Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

0 Comments

Published on: Wednesday, July 22nd, 2020 at 10:11 PM

கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

தும்மலில் இருந்து வெளியாகும் எச்சில் மூலமும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் மூச்சுக் காற்று மூலமும் கொரோனா பரவும் என கூறும் நிலையில், கொசுக்கள் மீது பரவுமா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

கொரோனா பாதித்தவரை கடித்த கொசு, பிறரை கடிப்பதாலோ, கொரோனா சிகிச்சை மையத்தில் உலாவிய கொசு, வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களை கடிப்பதாலோ, அல்லது அவர்கள் மீது அமர்வதாலோ கொரோனா பரவ வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி பிறருக்கும் எழுந்திருக்கலாம்.

இந்த கேள்வியை ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்கள், கொசு மூலம் கொரோனா பரவாது என பதில் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், மனிதர்களுக்குள் செல்ல இந்த வைரசிற்கு கொசுவை ஒரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இல்லை என்றும் இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு உலக சுகாதார அமைப்பு எழுத்துப் பூர்வமாக கூறிய கூற்றினை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு ஆதாரங்கள் திரட்டும் வகையில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. ஒருவேளை கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தை உறிஞ்சிய கொசு, வேறு நபர்களின் மீது அமர்ந்தாலும் வைரசை பரப்பாது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை உறிஞ்சியிருந்தாலும் இந்த கொசுக்களுக்கு மனிதர்களுக்கு வைரசை பரப்பும் தன்மை இல்லை என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet