Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஜூன் 21ஆம் தேதி உலகம் அழியப் போகிறதா? – பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவாதம்…

0 Comments

Published on: Tuesday, June 16th, 2020 at 9:50 AM

ஜூன் 21ஆம் தேதி உலகம் அழியப் போகிறதா? – பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவாதம்…

கொரோனா பரவலால் உலகமே நிலைகுலைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டர் கணித்துள்ளதாக கூறப்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், பண்டைய மாயன் காலண்டர் வரும் ஜூன் 21ஆம் தேதியுடன் உலகம் அழியப் போவதாக கூறுகிறது. 2012ஆம் ஆண்டும் இதேபோல் உலகம் அழியப் போவதாக செய்திகள் வந்தன. பின்னர், அது பொய் என நிரூபிக்கப்பட்டது.

தற்போது உலகமெங்கும் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படுவது கிரிகோரியன் காலண்டர். இது 1582ல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக மக்கள் பல்வேறு காலண்டர்களை பயன்படுத்தினர். அதில், குறிப்பிடத்தக்கவை மாயன் மற்றும் ஜூலியன் காலண்டர்.

சூரியனைச் சுற்றுவதற்கு பூமி எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொறுத்து, கிரிகோரியன் காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜூலியன் காலண்டர்படி, கிரிகோரியன் காலண்டரில் நாம் ஆண்டுக்கு 11 நாட்களை குறைவாக கணக்கிடுகிறோம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, தற்போது நாம் இருப்பது 2020ஆம் ஆண்டு அல்ல. உண்மையில் 2012ஆம் ஆண்டு எனக் கூறப்படுகிறது.

அதாவது 2020-1752=268 ஆண்டுகள். ஆண்டுக்கு 11 நாட்கள் எனில் 268×11 = 2948 நாட்கள். 2948/365= 8.07 (தோராயமாக 8 ஆண்டுகள்) அதனால், 2020-8=2012. இந்த கோட்பாட்டின்படி, டிசம்பர் 21, 2012 அன்று உலகம் அழியப் போவதாக கூறப்படுகிறது. தற்போதைய காலண்டர் கணக்கின்படி, அது வருகிற ஜூன் 21, 2020. அதாவது உலகம் அழியப் போவதாக மாயன் காலண்டர் கூறியது வருகிற ஜூன் 21, 2020 என ஒரு விவாதம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாசா ஆய்வாளர் ஒருவர், முன்னதாக சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் என்று கூறப்படும் நிபிரு பூமியை நோக்கி வருவதாகவும், இதனால், உலகம் அழியும் என்றும் கூறப்பட்டது. பின்னர், 2003ஆம் ஆண்டு 2012ல் உலகம் அழியும் என கூறப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் அதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. அதேபோல் மாயன் காலண்டரில் கூறப்பட்டுள்ளதாக தற்போது கிளம்பியிருக்கும் கருத்துக்கும் ஆதாரங்கள் இல்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet