Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ – அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட கொடூரம்…

0 Comments

Published on: Wednesday, November 13th, 2019 at 10:51 PM

சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து வைத்து, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவன் ஹரிஸ்குமார். இவன் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனது நண்பன் ரமேஷ்குமார் என்பவனுடன் சேர்ந்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துள்ளான். அவர் மயங்கிய பிறகு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்ததோடு நிறுத்ததாத அந்த மிருகங்கள் இரண்டும், தங்களது செல்போனில் படம்பிடித்து மிரட்டி, பின்னர் தனது நண்பர்களோடு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் 3 சவரன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர். காமுகர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தவித்துப் போன அந்த பெண், ஒரு வழியாக தனது குடும்பத்தினரிடம் விசயத்தை போட்டுடைத்தார்.

பாலியல் பலாத்காரம், நகைப் பறிப்பு என புகார் அளித்தபோதும், நகைப்பறிப்பு புகாரை மட்டும் பெற்றுக்கொண்ட போலீசார், ஹரிஸ்குமார் மற்றும் ரமேஷ்குமாரிடம் நகைக்கான ரூ.90 ஆயிரம் தரச் சொல்லி, முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் மட்டும் வாங்கித் தந்துள்ளனர். ஆனால், காமுகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet