Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாரிதாஸ் கூறியது உண்மைதானா? நியூஸ் 18ல் ரங்கராஜ் பாண்டே எப்போது சேரப்போகிறார்?

0 Comments

Published on: Sunday, July 12th, 2020 at 10:19 PM

மாரிதாஸ் கூறியது உண்மைதானா? நியூஸ் 18ல் ரங்கராஜ் பாண்டே எப்போது சேரப்போகிறார்?

நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக மாரிதாஸ் கூறிய நிலையில், அந்த தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே சேர்வதாக வெளியான தகவல்களின் உண்மை நிலை வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீது பல்வேறு தரப்பினர் தொடர்ந்து, பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையானது. அதையெல்லாம் மீறி ஊடகத்துறை தாங்கள் சொல்லும்படி கேட்க வேண்டும் என சிலர் நினைப்பதும் உண்டு. அவ்வாறு நடக்காவிட்டால், வழக்குகளை போட்டு முடக்குவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும் காலங்காலமாக நடந்தே வந்திருக்கிறது. ஆனால், இதையெல்லாம் ஊதித்தள்ளிவிட்டு ஊடகத்துறை தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட மாரிதாஸ் என்பவர், தொலைக்காட்சியில் இருக்கும் பலர் தங்களது சொந்த சித்தாந்தங்களின் அடிப்படையில் விவாதம் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். அதில், கைக்கூலி, அடிவருடி, அவன் இவன், பிச்சை எடுக்கும் காசு, ஜால்ரா என தொடர்ந்து ஊடகவியலாளர்களைக் கொச்சையான மொழிநடையில் பேசுவதையும், ஒருமையில் சுட்டிக் காட்டுவதையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல தொலைக்காட்சியான நியூஸ் 18ல் பணியாற்றும் ஊழியர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியதோடு, நியூஸ் 18 தலைமையகத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் அனுப்பியதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதை மாரிதாஸ் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் கொண்டாடி வந்த நிலையில், தனக்கு நியூஸ் 18 நிர்வாகத் தலைமை வினய் சாரவாகி (அவர் நிர்வாகத் தலைமை அல்ல) பதில் அனுப்பியுள்ளதாகவும், தான் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நியூஸ் 18 நிர்வாகம் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னதாகவும், மின்னஞ்சல் ஒன்றை காண்பித்து மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார்.

இதனிடையே, நியூஸ் 18 தலைமைப் பொறுப்பில் இருந்து குணசேகரன் நீக்கப்பட்டு விட்டதாகவும், அந்த இடத்திற்கு ரங்கராஜ் பாண்டே நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இது சுத்தப் பொய் எனக் கூறிய ரங்கராஜ் பாண்டே, பொய் பரப்புவோரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிட்டு வெகுவாக விளம்பரம் தேடி வைத்திருந்த மாரிதாஸ், தனக்கு மின்னஞ்சல் வந்ததாக கூறியது சுத்தப் பொய் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நியூஸ் 18 குழுமம், வினய் சாரவாகி, தங்களுக்கு இருக்கும் ஏராளமான வலைதளங்களில், ஒரே ஒன்றுக்கு மட்டும் ஆசிரியர் என்றும், அவர் நிர்வாக தலைமை இல்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், வினய் சாரவாகி அப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பவே இல்லை என்றும் நியூஸ் 18 குழுமம் உறுதி செய்தது. இந்த தகவலை வினய் சாரவாகியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, மாரிதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நியூஸ் 18 குழுமம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வினய் சாரவாகி தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வெளியிட்ட ட்விட்டர் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார் மாரிதாஸ். இதன்மூலம், அவர் பச்சைப் பொய்யை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet