Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

”அழகிகளோடு மசாஜ் வேணுமா..? இந்தா வாங்கிக்க…” பெண் ஆசையால் வாங்கிய கும்மாங்குத்து..!

0 Comments

Published on: Saturday, December 14th, 2019 at 1:09 PM

இளம் அழகிகளிடம் மசாஜ் செய்வதற்காக சென்ற தொழிலதிபரை மிரட்டி 5 லட்சம் ரூபாயும், விலை உயர்ந்த செல்போன், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்ததோடு, அவரை அடித்து உதைத்து அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகரைச் சேர்ந்தவர் 63 வயதான மஞ்சுநாத். தொழிலதிபரான இவர், அடிக்கடி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று வருவது வழக்கம். அடிக்கடி சென்று வந்ததால், மசாஜ் சென்டர் உரிமையாளர் ரமேஷுக்கும், மஞ்சுநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத்தை செல்போனில் தொடர்பு கொண்ட ரமேஷ், முதலியார்பேட்டை பகுதியில் புதிய மசாஜ் சென்டர் தொடங்கி இருப்பதாகவும், அங்கு இளம் அழகிகள் பலர் இருப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார். இதனால், மஞ்சுநாத் சபலமடைந்தாலும், பல வேலைகள் இருந்ததால், மசாஜ் சென்டருக்கு செல்ல முடியவில்லை. 2 நாட்களுக்கு பிறகு ரமேஷ் கூறிய இடத்திற்கு சென்ற மஞ்சுநாத், மசாஜ் சென்டர் அறிவிப்பு பலகை எதுவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து, ரமேஷை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்குவந்த ரமேஷ், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மசாஜ் செய்வதற்கான பொருட்களோ, எதிர்பார்த்தபடி இளம் அழகிகளோ இல்லாததால், சற்று அதிர்ச்சியடைந்த நிலையில், ரமேஷின் நண்பர் ஒருவர் மட்டும் அங்கு இருந்துள்ளார்.

திடீரென மஞ்சுநாத்தை மடக்கிப் பிடித்த இருவரும், அவர் பையில் இருந்த பணம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் செல்போனை மிரட்டியபடி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு மஞ்சுநாத் மறுப்பு தெரிவித்ததால், அவரை சரமாரியாக அடித்து உதைத்த ரமேஷும் அவரது நண்பரும், பணம், கைக்கடிகாரத்தை பிடுங்கியுள்ளனர். மஞ்சுநாத் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருப்பதையும் அறிந்து கொண்ட ரமேஷு, கூகுள் பே மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை மாற்றியுள்ளார்.

பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிக் கொண்டு இருவரும் தப்பிச் சென்ற நிலையில், முதலியார்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்ற மஞ்சுநாத், மசாஜ் சென்டர் உரிமையாளர் ரமேஷ் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேஷையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet