Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கள்ளக்காதலி யாருக்கு..? கொலையில் முடிந்த போட்டி… குமரியில்தான் இந்த கூத்து!

0 Comments

Published on: Monday, August 10th, 2020 at 10:59 PM

 

கள்ளக்காதலி யாருக்கு..? கொலையில் முடிந்த போட்டி… குமரியில்தான் இந்த கூத்து!

கன்னியாகுமரியில் நண்பரின் கள்ளக்காதலியை அபகரிக்க முயன்ற நபர், நண்பராலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறையைச் சேர்ந்த 30 வயதான டார்வின், டி.ஆர் பர்னிச்சர்ஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி கடைக்கு வந்து சென்றபோது டார்வின் உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. டார்வினும் அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருப்பதும், வெளியூர்களுக்கு சென்று லாட்ஜ்களில் ரூம் எடுத்து கும்மாளமிட்டதும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜுக்கு தெரியவந்துள்ளது.

விஜயராஜ், டார்வினின் நண்பர் என்பதால், அடுத்தவர் மனைவியை அபகரிப்பது தவறு என டார்வினுக்கு அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாத டார்வின் அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளார். இதனால், எரிச்சல் அடைந்த விஜயராஜ், பெண்ணின் கணவரான பால்ராஜிடம் விபரத்தை போட்டு உடைத்துள்ளார். இதைக் கேட்டு கொதித்துப் போன பால்ராஜ், விஜயராஜையே அழைத்துச் சென்று டார்வினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகறாறு முற்றி கைகலப்பான நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் பால்ராஜ் புகார் கொடுத்தார். புகாரில் இருதரப்பையும் அழைத்து போலீசார் பஞ்சாயத்து செய்து அனுப்பியுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தை காவல்நிலையம் வரை கொண்டு சென்றதால், கணவர் மீது கோபமடைந்த பெண், கணவர் பால்ராஜை பிரிந்து டார்வின் உதவியுடன் தனியாக வசிக்கத் தொடங்கினார். டார்வினின் கள்ளக்காதல் குறித்து பால்ராஜிடம் போட்டுக்கொடுத்த விஜயராஜும் அந்த பெண்ணிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.

இதனால், மேலும் கடுப்படைந்த டார்வின், தனது கள்ளக்காதலியை அடையவே கணவரிடம் போட்டுக்கொடுத்தது தெரிய வந்து விஜயராஜ் மீது கோபத்தில் இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காட்டாதுறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த விஜயராஜை, தனது நண்பர் அஸ்வின் உடன் சேர்ந்து டார்வின் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜயராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தக்கலை போலீசார் விசாரித்து வந்த நிலையில், திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி விஜயராஜ் உயிரிழந்ததால், கொலை வழக்காக மாற்றினர். இதையடுத்து, டார்வினை கைது செய்த போலீசார், அவரது நண்பர் அஸ்வின் மற்றும் கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet