Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இன்னைக்கு சந்திர கிரகணம் – எத்தனை மணிக்கு வெறும் கண்ணால் பார்க்கலாம்..!?

0 Comments

Published on: Friday, January 10th, 2020 at 11:50 AM

2020ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது. கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா. இதேபோல், இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இதை, இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்றும், 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், இந்த ஆண்டில் மேலும் 3 சந்திர கிரகணமும், 2 சூரிய கிரகணமும் நிகழ உள்ளன. இந்த ஆண்டில் இனி வரும் சந்திர கிரகணங்களும் முழு கிரகணமாக இருக்காது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet