Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஜப்பானியர்களை சோகத்தில் ஆழ்த்திய சாசே சான் – 50 ஆண்டுகளுக்கு பின் நெடுந்தொடர் நிறுத்தம்…

0 Comments

Published on: Friday, May 15th, 2020 at 5:14 PM

ஜப்பானியர்களை சோகத்தில் ஆழ்த்திய சாசே சான் – 50 ஆண்டுகளுக்கு பின் நெடுந்தொடர் நிறுத்தம்…

கொரோனா ஊரடங்கு காரணமாக ஜப்பானில் உலகிலேயே நீண்டகாலம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் ஒரு நெடுந்தொடர் முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

முடிவில்லாமல் நீண்ட நாட்கள் தொடரும் ஒரு நிகழ்வை, சிந்துபாத் கதை என்று கூறும் வழக்கு தமிழகத்தில் உள்ளது. தினத்தந்தி நாளிதழில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகும் கன்னித் தீவு என்ற சித்திரக்கதையின் அடிப்படையிலேயே இந்த சொல் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது.

இதேபோல், ஜப்பானில் 1969ஆம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாக சாசே சான் என்ற கார்டூன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மாச்சிகோ ஹசிகாவா என்ற பெண் உருவாக்கிய கதாபாதிரங்களின் அடிப்படையில், கடந்த 1946ஆம் ஆண்டு, ஷின்புன் என்ற சிறிய பத்திரிகையில் சித்திர கதையாக சாசே சான் வெளியானது.

பின்னர் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சாசே சான் கார்டூனாக பரிமாண வளர்ச்சியடைந்து. சாசே என்ற பெண்ணை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது இந்த சாசே சான் கார்டூன்.

 1969ஆம் ஆண்டு முதல் முறையாக தொலைகாட்சியில் ஒளிபரப்பானபோது ஜப்பான் மக்கள் சாசே சானை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். நம்ம ஊரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சக்திமானை பார்ப்பதைப் போல, இந்த கார்டூனை பார்ப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், ஜப்பான் மக்கள் குடும்பமாக தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து சாசே சான் கார்டூனை பார்த்து ரசிப்பார்கள்.

மக்களிடம் பெற்ற பேராதராவால் சாசேசான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகியது. கால போக்கில் புதிய கண்டுபிடிப்புகளும், நவீன பொழுதுபோக்கு சாதனங்களும் வளர்ந்தாலும், சாசே என்ற பெண்ணை ஜப்பானியர்கள் தங்கள் குடும்பத்தின் ஒருவராகவே கருதியதால் அந்த கார்டூன் மீதான ஆர்வம் அவர்களுக்கு குறையவில்லை.

மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சாசே சானை ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு, உலகிலேயே நீண்டநாள் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது சாசே சான்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் சாசே சான் கார்டூன் முதல் முறையாக நிறுத்தப்படவுள்ளது. தற்போது, சினிமா மற்றும் இதர தயாரிப்பு பணிகளுக்கு ஜப்பானில் தடையிருப்பதால், சுமார் 50 ஆண்களில் முதல்முறையாக வரும் ஞாயிற்றுகிழமையன்று ஜப்பானில் சாசே சானின் புதிய கதை ஒளிபரப்பாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக பழைய கதை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாசே சானின் ரசிகர்களுக்கு கவலையை தந்தாலும், பழைய கதை ஒளிபரப்பாகும் எனக் கூறியுள்ளதால், பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த கதையை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக மகிழ்கின்றனர் ஜப்பானியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet