0 Comments
Published on: Sunday, August 9th, 2020 at 12:06 PM
லிப்டில் பேண்டை அவிழ்த்து காட்டிய நபர்… உண்மையைச் சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணன்…
ஆண்கள் தம்மிடம் எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து கூறியுள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது மகளுக்கும் அது நேர்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல பெண்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை மூலம் பிரபலமடைந்தார். தற்போது இதே நிகழ்ச்சியை யூடியூப் மூலம் நடத்தி வருகிறார். இருப்பினும், தொலைக்காட்சியில் இருந்த சுவாரஸ்யம், இப்போது இல்லை. தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை அண்மையில் தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் சிறுமியாக இருந்தபோது, அவருடைய உறவினர் ஒருவர், வேண்டுமென்றே முன்னால் நின்று கொண்டு அவரது ஜிப்பை திறந்து, அதை காட்டியபடியே நின்பாராம். விவரம் தெரிந்தபிறகு தன், அவர் செய்த ஒவ்வொன்றும் மனதில் ரணத்தை ஏற்படுத்தியதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது மகள் லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது ஒருவன் திடீரென தனது பேண்டை அவிழ்த்து, அவனுடையதை காட்டியதால், பதறியடித்து ஓடி வந்தாராம் அவரது மகள். சிசிடிவியில் பார்த்தபோது, அவனது முகம் சரியாக தெரியாததால், புகார் அளிக்காமல் விட்டுவிட்டாராம்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் என்னிடமே இவ்வளவு சேட்டைகளை செய்யும் பல ஆண்கள், முகம் தெரியாத பெண்களிடம் எப்படி எல்லாம் தவறாக நடந்து கொள்வார்கள் என்பதை யோசித்தால் நெஞ்சம் பதைபதைப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
No comments yet