Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சீனாவின் புதிய கண்டுபிடிப்பு – 3டி செய்தி வாசிப்பாளர்…

0 Comments

Published on: Sunday, May 24th, 2020 at 5:57 PM

சீனாவின் புதிய கண்டுபிடிப்பு – 3டி செய்தி வாசிப்பாளர்…

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் கொண்ட முப்பரிமாண செய்தியாளரை சீன செய்தி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சீனாவின் ஷின்ஹுவா செய்தி நிறுவனம் சோகோ என்னும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்கை செய்தியாளரை உருவாக்கியுள்ளது. ஷின்ஷியாவெய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முப்பரிமாண செய்தியாளரால் நின்றவாறு, அமர்ந்தவாறு அல்லது நடந்தவாறு செய்திகளை வழங்க முடியும்.

ஸாவோ வான்வெய் என்னும் செய்தியாளரின் அசைவுகளை 100க்கும் மேற்பட்ட கேமராக்களால் படம்பிடித்து, அதன் மூலம் ஷின்ஷியாவெய்க்கு உயிர் கொடுத்துள்ளனர் தொழில்நுட்பக் கலைஞர்கள். மனிதர்களைப் போலவே தோற்றமும், நடை, உடை, பாவனைகளையும் கொண்ட ஷின்ஷியாவெய்யின் சிகையலங்காரத்தையும், உடைகளையும் தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet