Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆசையாக பேசினார்… நெருக்கமாக இருந்தோம்… மயூரவர்ஷினியிடம் மயங்கியோர் கண்ணீர்…!

1 Comments

Published on: Monday, December 16th, 2019 at 1:52 PM

திருமணமனமான பெண் ஒருவர், எஸ்.ஐ., தொழிலதிபர் உள்ளிட்டவர்களை மயக்கி உல்லாசமாக இருந்ததோடு, லட்சக்கணக்கில் பணமும்  மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை மனோகர் நகரில் வசித்து வருபவர் 39 வயதான பாலசந்தர். சென்னை வடபழனி, மும்பை மற்றும் துபாயில் குலோபல் டச் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால், பிள்ளைகளை பார்த்துக் கொள்ள முடியாமல், மாமியார் வீட்டில்  விட்டுள்ளார்.

பாலசந்தரின் சென்னை நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் செந்தாமரை என்ற மயூரவர்ஷினி வேலைக்குச் சேர்ந்துள்ளார். தனது சொந்த ஊர் பெங்களூரு என்று கூறிய மயூரவர்ஷினி, வேலைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால், அதற்காக பயிற்சி எடுக்கவே, இங்கு பணியில் சேர்ந்ததாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய பாலசந்தர், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.

இந்த நிலையில், அரைகுறை ஆடையுடம் அலுவலகத்திற்கு வரும் மயூரவர்ஷினி, மனைவியை இழந்து வாடிய பாலசந்தரை மயக்கும் பேச்சின் மூலமாக தனது வலையில் வீழ்த்தியுள்ளார். தனக்கு 36 வயதானலும், இதுவரை எந்த ஆணும் தன்னை தொடவில்லை எனக் கூறிய மயூரவர்ஷினி, உங்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறேன் எனக்கூறி, பாலசந்தரின் செக்ஸ் ஆசையை தூண்டிவிட்டுள்ளார்.

மனைவியை இழந்து, தனிமையில் இருந்து வந்த பாலசந்தரும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். மயூரவர்ஷினிக்கு போதை மற்றும் புகைப்பழக்கமும் இருப்பதால், இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு கும்மாளமும் அடித்துள்ளனர். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட மயூரவர்ஷினி, பாலசந்தரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்ததோடு, தேவைப்படும் நகைகளையும் கேட்டு வாங்கியுள்ளார். அவரது செக்ஸ் போதையில் மயங்கிய பாலசந்தரும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, தனக்கு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் மயூரவர்ஷினியை அனுபவித்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த சில நாட்களில், மயூரவர்ஷினி யாருக்கும் தெரியாமல் வெளியில் செல்வதும், மதுபோதையில் நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அறிந்த பாலசந்தர், அவரை பல நாட்கள் பின் தொடர்ந்து, அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்த போதுதான், அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் தெரியவந்துள்ளன.

அதாவது,  செந்தாமரை என்ற மயூரவர்ஷினியின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம். 44 வயதாகிய மயூரவர்ஷினி ஏற்கெனவே சதாசிவம் என்பவருடன் திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். சொந்த ஊரில் திமுக பஞ்சாயத்து தலைவியாக இருந்த மயூரவர்ஷினி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு, துபாயில் வேலைபார்த்த ராஜதுரை என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். அவரிடமும் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, மயூரவர்ஷினி மீது சென்னை புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ராஜதுரை புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க வந்த எஸ்.ஐ. சந்தோஷ்குமாரையும் மயக்கி தனது வலையில் வீழ்த்திய மயூரவர்ஷினி, அவரிடம் இருந்தும் பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்த விவகாரம் மேலதிகாரிகளுக்கு தெரிந்து, எஸ்.ஐ. சந்தோஷ்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால், தனக்கு தேவையான பணம் கிடைக்காத நிலையில்தான், பாலசந்தரின் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளார் மயூரதர்ஷினி.

இதையறிந்த, பாலசந்தர், மயூரவர்ஷினியிடம் தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு தன்னுடன் உல்லாசமாக இருந்ததற்கு சரியாகிவிட்டது என்று கூறிய அவர், மீறி பணம் கேட்டால் ஆட்களை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்நிலையத்தை அணுகியபோது, அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பாலசந்தர், மயூரவர்ஷினியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS