Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சொன்னதுதான் நடந்தது? திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்… பாஜகவில் இணையவில்லை என மழுப்பல்…

0 Comments

Published on: Wednesday, August 5th, 2020 at 4:45 PM

சொன்னதுதான் நடந்தது? திமுகவில் இருந்து கு..செல்வம் நீக்கம்பாஜகவில் இணையவில்லை என மழுப்பல்

பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, திமுகவில் இருந்து எம்.எல்.. கு..செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது எம்.எல்.. பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவில் இணையவில்லை என்றும் மழுப்பலாக  பதிலளித்துள்ளார்.

திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில், நேற்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.. கு..செல்வம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தனது தொகுதி குறித்தே பேசியதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால், அவர் ஸ்டாலினுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கருத்துகளை கூறியதால், விரைவில் திமுகவில் இருந்து நீக்கப்படுவார் என நாம் நேற்றே தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், திமுக தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து கு..செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்று, காவித்துண்டை அணிந்து கொண்டு பேட்டி கொடுத்தார். அப்போது ராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்து தெரிவிக்கவே பாஜக தலைவர்களை சந்தித்தாக தெரிவித்தார். நேற்று தொகுதி பிரச்சனை குறித்து பேசிய கு..செல்வம், இன்று அந்தர் பல்டி அடித்து, ராமர் கோயிலுக்கு வாழ்த்து கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் பாஜகவில் வந்து சேர வேண்டும் என்றும் கூறினார்.

ஏற்கெனவே கட்சியில் இரண்டு பதவி, எம்.எல்.. உள்ளிட்ட பதவிகள் இருக்கும்போதும், மேலும் ஒரு பதவி கிடைக்கவில்லை என கு..செல்வம் முடிவு எடுத்திருப்பது, துரோகத்தையும், மற்றவர்கள் யாரும் வாழக்கூடாது என நினைக்கும் குரூர எண்ணம் கொண்டது என்றும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், தற்போது சூழலில் பாஜகவில் இணைந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தால் எம்.எல்.. பதவி பறிபோகும் என பயந்தே அவர், பாஜகவில் இணையவில்லை என இன்னும் மழுப்பலாக பதிலளித்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டும் திமுகவினர், கு..செல்வம் எம்.எல்.. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet