Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விராட் கோலி ஏன் அப்படி செய்தார்… அவரே சொன்ன விளக்கம்…

0 Comments

Published on: Sunday, December 8th, 2019 at 3:09 PM

ஐதராபாத்தில் நேற்று முன் தினம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்த நோட் புக் கொண்டாட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் ஐதரபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

இதனால், இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து, அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் கோலி அதிகபட்சமாக 94 ரன்கள் குவித்தார். விராட் கோலி அதிரடி காட்டிய  அதே நேரத்தில் வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டி விட்டு, வில்லியம்ஸ் கொண்டாடும் நோட் புக் ஸ்டைலை தானும் செய்தார்.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய விராட் கோலி, “2017ஆம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த போட்டியின்போது, என்னை நோட் புக் கொண்டாட்டத்துடன் வழியனுப்பினார்கள். அதன் காரணமாகவே இன்று நானும் அதை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். எனவே தான் நோட்புக்கில் சில டிக்குகளை செய்தேன். ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு, நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கு ஒருவர் கைக்குலுக்கிக் கொண்டோம். எனவே, கிரிக்கெட் களத்தில் கடினமாக விளையாடினாலும், எதிரணிக்கு எப்போதும் மதிப்பு அளிக்க வேண்டும்” என கோலி தெரிவித்தார்.

களத்தில் கோலி கொடுத்த பதிலடியும், அதன் பிறகு அவர் கொடுத்த பதிலும் ரசிகளிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet