Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரஜினி 13வது இடம் தான்… ஆனால் கோலி முதலிடம்…

0 Comments

Published on: Thursday, December 19th, 2019 at 9:00 PM

2019ஆம் ஆண்டில் இந்திய அளவில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரஜினிகாந்த் 13வது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் நாளிதழ், ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்.

இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் டெண்டுல்கர் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள பிரபலமான 100 பேர் பட்டியலில் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை.

இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (31), பும்ரா (33), கே.எல். ராகுல் (34), ஷிகர் தவான் (35), ஜடேஜா (51), குல்தீப் யாதவ் (61) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதேபோல், இந்த பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மிதாலி ராஜ் (88), ஸ்மிருதி மந்தனா (90), ஹர்மன் ப்ரீத் கவுர் (91) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி. சிந்து (63), சாய்னா நேவால் (81), கால்பந்து வீரர் சுனில் சேத்ரி (85), குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் (87), கோல்ப் விளையாட்டு வீரர் அனிர்பன் லஹிரி மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா (98) ஆகியோரும் இணைந்துள்ளனர். இதில் , தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 13ஆம் இடம் பிடித்துள்ளார்.  அதேபோல், விஜய் 47வது இடத்திலும், அஜித் 52வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet