Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சரவணா ஸ்டோர்ஸில் சிறுவனுக்கு நேர்ந்த கதி – கண்முன்னே கண்டு பதறிய தாய்…

0 Comments

Published on: Wednesday, January 8th, 2020 at 10:07 AM

சென்னையில் சரவணா ஸ்டோரில் எஸ்கலேட்டரில் செல்லும்போது 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை கன்னிகாபுரம் எம்.எஸ் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (31). இவரது மகன் ரணீஷ் பாபு(13). இவர் வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பொங்கல் பண்டிகை வருவதால் துணி எடுக்க சசிகலா, அவரது மகன் தணீஷ்பாபுவுடன் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சென்றுள்ளார்.

பின்னர் சரவணா ஸ்டோரில் உள்ள 8 மாடிக்கு எஸ்கலேட்டர் மூலமாக இருவரும் ஏறியுள்ளனர். அப்போது தணீஷ்பாபு திடீரென கீழே விழுந்து பின் எஸ்கலேட்டரின் நடுவே அவரது தலை சிக்கியுள்ளது. இதனால் சிறுவன் அலறியதைப் பார்த்து தாய் பதறிய நிலையி கடை ஊழியர்கள், உடனடியாக எஸ்கலேட்டரின் மின் இணைப்பை துண்டித்தனர். அதே நேரத்தில், அருகிலிருந்த பொதுமக்கள் சிக்கியிருந்த தணீஷ் பாபுவின் தலையை மீட்டனர்.

தணீஷ்பாபுவின் தலையில் லேசான காயம் ஏற்பட்டதால், அவன் அலறித் துடித்தான். ஆனால் சரவணா ஸ்டோர் ஊழியர்களோ ஒன்றும் நடக்காததுபோல இருந்துள்ளனர். இதையடுத்து, சசிகலா உடனே தனது மகனை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த சசிகலா, போதிய பாதுகாப்பின்றி, குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எஸ்கலேட்டரில் இடைவெளி இருப்பதாகவும், அஜாக்கிரதையாக நடந்து கொள்ளும் சரவணா ஸ்டோர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet