Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கேரள மாணவி வால்பாறையில் கொலை – மெக்கானிக் காதலன் செய்த கொடூரம்…!

0 Comments

Published on: Sunday, January 12th, 2020 at 8:53 AM

கேரளாவில் காணாமல் போன பிளஸ் 2 மாணவி பொள்ளாச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்த பயன்படுத்திய கார் மூலம் முன்னாள் காதலன் சிக்கியுள்ளான். காதலி தனக்கு கிடைக்காவிட்டால்….? என யோசித்த  இளைஞனால் நிகழ்ந்த விபரீதம் என்ன?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிளஸ் பிளஸ்2 மாணவி இவா டேனியல், அதேபகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த சபர்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் சபர்ஷாவை உருகி உருகி காதலித்த இவா டேனியல், நாட்கள் செல்ல செல்ல மெக்கானிக் காதலன் கசந்து போனான். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டால் சபர்ஷாவுடனான காதலை துண்டித்துக் கொண்ட மாணவி பள்ளி படிப்பு முடித்த உடன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காதலி தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற ஆத்திரம் சபர்ஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. காதலியை சமாதானப்படுத்த வால்பாறைக்கு சுற்றுலா செல்லலாம் என்று இவா டேனியலிடம் சபர்ஷா வற்புறுத்திள்ளார். கடைசியாக வால்பாறை சுற்றுலா சென்றுவிட்டு, சபர்ஷாவை கழட்டிவிட்டு விடலாம் என மாணவியும் திட்டமிட்டார். பழுது நீக்க வந்த காரில், காதலி இவா டேனியலை ஏற்றிக்கொண்டு வால்பாறைக்கு பறந்தார் சபர்ஷா.

வால்பாறையில் உள்ள வரட்டுப்பாறை பகுதியில் தங்கியிருந்த இருவருக்கும் இடையே, வெளிநாடு செல்வது தொடர்பாக மீண்டும் மோதல் வெடித்துள்ளது. நீ எனக்கு வேண்டும்… வெளிநாடு செல்லக்கூடாது என்று இவா டேனியலை மிரட்டியுள்ளார் சபர்ஷா. ஆனால், நீ ஒரு சாதாரண மெக்கானிக். உன்னுடன் என்னால் வாழ முடியாது என உதாசீனப்படுத்தியுள்ளார் இவா டேனியல். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சபர்ஷா, இவா டேனியலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஆத்திரம் தீர்ந்தபிறகு, சடலமாக கிடந்த காதலியை பார்த்துக் கதறி அழுத சபர்ஷா, கொலைக்கு ஆதாரமாக இருக்கும் இவா டேனியலின் உடலை மறைத்தால் தான் தான் தப்பிக்க முடியும் என முடிவு செய்து, தேயிலை எஸ்டேட்டில் சடலத்தை வீசி விட்டு தப்பியுள்ளார். ஆனால் விதி வலியது அல்லவா…? காதல் ஜோடி பயணித்த காரின் உரிமையாளர், தனது காரைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.

தனது மகள் இவா டேனியலைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோரும் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்தனர். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் இருப்பிடத்தை போலீசார் ஆய்வு செய்தபோது, காணாமல் போன கார் வால்பாறையில் உள்ள காடம்பாறை பகுதியை காட்டியுள்ளது. வால்பாறை போலீசாரை தொடர்பு கொண்ட எர்ணாகுளம் போலீசார் கார் குறித்த விவரங்களை கூறியுள்ளனர்.

காடம்பாறை பகுதியில் தமிழக போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில் காணாமல் போன காரை ஓட்டிவந்த சபர்ஷாவை மடக்கி விசாரித்தனர். சபர்ஷா முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல்துறையினர் தங்களது வழக்கமான பாணியில் விசாரித்தபோது, மாணவியை கொலை செய்துவிட்டு தப்ப முயன்றது தெரியவந்தது

சபர்ஷாவை கைது செய்த தமிழக போலீசார் எர்ணாகுளம் போலீசாருடன் இணைந்து விசாரணையை தொடங்கினர். மேலும் மாணவி கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet