Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடிகர் பொன்னம்பலத்துக்கு உடல்நலக்குறைவு – ஓடோடிச் சென்று உதவிய கமல்ஹாசன்…

0 Comments

Published on: Thursday, July 9th, 2020 at 8:15 PM

நடிகர் பொன்னம்பலத்துக்கு உடல்நலக்குறைவு – ஓடோடிச் சென்று உதவிய கமல்ஹாசன்…

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொன்னம்பலம் உடல்நிலை குறித்து அறிந்த நடிகர் கமல்ஹாசன், உடனடியாக அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அளித்து வருவதோடு, பொன்னம்பலத்திடம் நாள்தோறும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு உதவி செய்வதோடு, அவரது இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet