Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஊரடங்கால் சந்திக்க முடியாமல் திணறிய காதலர்கள் – 4 மாதத்திற்கு சந்தித்தபோது எடுத்த தவறான முடிவு…

0 Comments

Published on: Thursday, August 6th, 2020 at 8:18 PM

ஊரடங்கால் சந்திக்க முடியாமல் திணறிய காதலர்கள் – 4 மாதத்திற்கு சந்தித்தபோது எடுத்த தவறான முடிவு…

கள்ளக்குறிச்சி அருகே ஊரடங்கால் சந்திக்காமல் இருந்த காதல் ஜோடி, 4 மாதத்திற்கு பின் சந்தித்தபோது தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பாஸ்குமார். இவர், காட்டுக்கொட்டாயில் உள்ள அண்ணா அரசு கல்லூரியில் படித்து வந்த நிலையில், இவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம்  செம்பாகுறிச்சி  கிராமத்தைச் சேர்ந்த கவிதாவும் படித்து வந்தார்.

கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டில் இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். புதன்கிழமை காலை  வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்ற பாஸ்குமார், இரவு வரை வீடு திரும்பாததால்  பெற்றோர்கள் தேடி வந்தனர். அதேபோல், புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து  வெளியே சென்ற கவிதாவையும் காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி அலைந்தனர்.

இந்நிலையில், ஈரியூர்  காட்டுகொட்டாய்  வனப்பகுதியை  ஒட்டியுள்ள அருஞ்சோலை அம்மன் கோயிலில்  ஒரு இளம் ஜோடி  தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தனர். வியாழக்கிழமை காலை காட்டுப்பகுதிக்கு சென்ற விவசாயிகள் பார்த்து கீழ்குப்பம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  இருவரின் சடலத்தையும்  கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் விசாரணை நடத்தியபோதுதான், அவர்கள் பாஸ்குமார் மற்றும் கவிதா என்பது தெரியவந்தது.

காதல் ஜோடிகளாக பாஸ்குமாரும், கவிதாவும் மூன்றாம் ஆண்டு செல்ல இருந்தனர். ஊரடங்கால் கல்லூரி திறக்கப்படாததால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாமல் மன  உளைச்சலில் இருந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் இருக்கும் என்றும் அஞ்சியுள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதை அடுத்து,  இருவரும் வியாழக்கிழமை கோயிலில் சந்தித்து கடைசியாக பேசியுள்ளனர். இனி வாழ்வது கடினம் என முடிவு எடுத்த இருவரும், சாமி சிலைகளில் உள்ள வேட்டி மற்றும் புடவையை எடுத்து கோயிலின் மேற்கூறை இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பாஸ்குமார் மற்றும் கவிதாவின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தற்கொலைதான் செய்து கொண்டார்களா? அல்லது வெவ்வேறு சமூகம் என்பதால், யாராவது கொலை செய்து தொங்க விட்டார்களா? விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet