0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 9:33 PM
பாரதிராஜா காலில் விழுந்து கேட்கிறேன்… கெஞ்சும் தயாரிப்பாளர் எஸ்.தாணு…
இயக்குநர் பாரதிராஜா தோற்றுவித்த புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலைக்க வேண்டும் என காலில் விழுந்து கேட்பதாக, தயாரிப்பாளர் எஸ்.தாணு கெஞ்சியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தலைமையில், தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர் மஞ்சுளாவிடம் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, பாரதிராஜாவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய் வீட்டை பிரிக்கும் செயல் என்றும் ஒரு சிலர் சுயநலத்திற்காக நமது சங்கம் பிளவுபடுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். மீண்டும் இச்சங்கத்திற்கு பாரதிராஜா வர விரும்பினால், அவரை சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்ய தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாரதிராஜா தோற்றுவித்த புதிய சங்கத்தை கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்காக, அவரது காலில் விழுந்து கேட்பதாகவும் எஸ்.தாணு குறிப்பிட்டார். இதனிடையே, ஒரு சில தயாரிப்பாளர்கள், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பாரதிராஜா உள்ளிட்டோரை நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
No comments yet