Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டிரம்பை விவாகரத்து செய்யும் மெலானியா… காரணம் ரொம்ப சிம்பிள்..!

0 Comments

Published on: Tuesday, November 10th, 2020 at 9:32 AM

டிரம்பை விவாகரத்து செய்யும் மெலானியாகாரணம் ரொம்ப சிம்பிள்..!

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விரைவில் விலக உள்ள டொனால்ட் டிரம்பை, அவரது மூன்றாவது மனைவியான மெலானியாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள நிலையில், அதிபர் டிரம்பும் 30 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக அதிபராகும் வாய்ப்பை இழந்து அவமானம் அடைந்துள்ளார். அவரது தோல்வியை அமெரிக்க மக்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், மனைவி மெலானியாவும் அடுத்த ஆப்பை தயாராக்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அது வேறொன்றுமில்லைவிவாகரத்துதான்.

பெரும் தொழிலதிபரான டிரம்ப், ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றவர். தற்போதைய மனைவியான மெலானியாவை 15 ஆண்டுகளுக்கு முன் கரம்பிடித்தார் டிரம்ப். அப்போது மெலானியாவுக்கு வயது 36ஆக இருந்த நிலையில், டிரம்புக்கோ 60 வயது. தற்போது இருவருக்கும் 10 வயதில் மகன் இருக்கிறான். அழகுப்பதுமை இவாங்கா, ஜூனியர் டிரம்ப் ஆகியோர் டிரம்பின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள்தான். இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தைகளையும் டிரம்ப்தான் வளர்த்து வருகிறார்.

15 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை கொண்டாடிய டிரம்ப்மெலானியா ஜோடிக்கு, தற்போது அது கசந்துவிட்டதாக கூறுகின்றனர் முன்னாள் உதவியாளர்கள். இதனாலேயே இருவரும் பொது இடங்களில் கூட ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொண்டதை சுட்டிக்காட்டும் அவர்கள், வெள்ளை மாளிகையில் கூட, டிரம்பும், மெலானியாவும் தனித்தனி அறைகளிலேயே வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இல்லறம் கசந்தாலும், டிரம்ப் அதிபர் பதவியில் இருக்கும்போது, அவரை விவாகரத்து செய்தால், அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்ற பெருமை இல்லாமல் போவதோடு, டிரம்பும் தன்னை தண்டிக்க முயற்சிப்பார் என்ற அச்சத்தின் காரணமாகவே மெலானியா இதுவரை அமைதி காத்து வருவதாக உதவியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு இறங்குவதற்கு ஜோ பைடன் காத்திருப்பதைவிட, மெலானியாவே அதிக எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet