0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 12:01 AM
ஐபிஎல் 2020: இறுதிப் போட்டி தேதி திடீர் மாற்றம்… ஸ்பான்சராக நீடிக்கப் போகும் சீன நிறுவனம்..!
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதி திடீரென மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 8ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் என ஏற்கெனவே ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், இறுதிப் போட்டி தேதியை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சீனா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஸ்பான்சர்களையும் தக்கவைத்து கொள்வதாக ஐபிஎல் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இதை உறுதி செய்யும் விதத்தில் ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியை நம்பவர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், வார விடுமுறை நாட்களில் அல்லாமல், வார நாட்களில் நடைபெறும் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டி இதுவாகும். மேலும், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ-வையே தக்க வைக்க முடிவு செய்யபப்ட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நிறுவனங்களின் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான அனுமதியை மத்திய அரசு அடுத்த வாரத்திற்குள் வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
No comments yet