Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்… எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

0 Comments

Published on: Saturday, July 11th, 2020 at 10:44 PM

இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்… எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் கேரளா, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தருமபுரி, மதுரை உட்பட 10 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னையை பொருத்தவரை ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet