Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் – ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்… அடுத்து நடந்தது தான் செம ட்விஸ்ட்…!

0 Comments

Published on: Monday, January 6th, 2020 at 4:57 PM

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, ஓடும் ரயிலில் இருந்து மனைவியே கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அம்பத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் காயத்துடன் அரக்கோணம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் ரயிலில் இருந்து 3 பேர் தள்ளிவிட்டுவிட்டதாகவும், அதில் காயமடைந்ததாக தெரிவித்தார்.

அவருக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்து அரக்கோணம் புறக்காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, ரயில்வே துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரயிலில் இருந்து தள்ளிவிட்டது யார் என ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ராஜேந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் செல்வதற்காக ஆவடியில் ஏறியுள்ளார். பகல் இரண்டு முப்பது மணிக்கு ரயில் அரக்கோணம் திருத்தணி இடையே காட்டு கேட் அருகில் செல்லும்போது படிக்கட்டு ஓரம் நின்றுள்ளார். அதே பெட்டியில் பயணம் செய்த 3 பேர், ராஜேந்திரன் அருகில் வந்து, நீங்கள் அஸ்வினியின் கணவரா என கேட்டுள்ளனர்.

ராஜேந்திரன் ஆமாம் என்று கூறிய அடுத்த நொடியே, ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். அப்போது ரயில் மெதுவாகச் சென்றதால், கீழே விழுந்து படுகாயத்துடன் மயக்கமடைந்த ராஜேந்திரன், சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தபிறகு, தானாகவே அரக்கோணம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

ரயிலில் இருந்து தள்ளிய 3 பேர் யார் என போலீசார் கேட்டபோது, தன்னுடைய மனைவி அஸ்வினிக்கும், தனக்கும் தகராறு உள்ளதாகவும், அவர்தான் தன்னை கொலை செய்ய முயன்றிருக்கலாம் என ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும், தன்னை தள்ளிய  3  பேரும் அரக்கோணம் ரயில் நிலையத்தில்தான் ஏறியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ராஜேந்திரன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது மனைவி அஸ்வினியை பிடித்து விசாரித்தபோதுதான், பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.

அனுராக் என்பவருடன் கள்ளக்காதலில் இருந்த அஸ்வினி, தான் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தனது கணவர் மீது சந்தேகப்படுவதுபோல நடித்து அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால், கணவர் கோபித்துக் கொண்டு வெளியே செல்லும் நேரங்களில் அனுராக்கை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் அஸ்வினி. நாளடைவில் குழந்தைகள் மூலம் இதை அறிந்து கொண்ட ராஜேந்திரன், மனைவி அஸ்வினியை கண்டித்தார்.

அதை கண்டுகொள்ளாத அஸ்வினி, நீ என்ன ஒழுக்கமானவனா? என்று கேட்டபடி, அனுராக்குடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், நாள்தோறும் சண்டை முற்றியதால், மனைவி அஸ்வினி மீது செம்பியம் மகளிர் காவல்நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். இருவரையும் அழைத்து பேசிய போலீசார், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சமாதானமாக செல்லுமாறு அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், அனுராக் உடனான கள்ளக்காதலை கைவிடக் கூடாது என நினைத்த அஸ்வினி, அதற்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக நாள் பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தணி செல்வதாக கூறிவிட்டு ராஜேந்திரன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அஸ்வினி தனது கள்ளக்காதலருக்கு போன் மூலம், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவரும் தனது நண்பர்கள் தினேஷ், கமலேஸ்வரன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ராஜேந்திரன் பயணித்த ரயிலில் ஏறியுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்று அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றதாக அஸ்வினி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அனுராக்கை தனது கணவருக்கு தெரியாது என்பதால், அவரை வைத்தே கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார் அஸ்வினி.

மேலும், ராஜேந்திரன் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது போல், ஜோடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர் உயிர் பிழைத்து விட்டதால், தாங்கள் சிக்கிக் கொண்டதாகவும் அஸ்வினி தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். அஸ்வினியை கைது செய்த அரக்கோணம் ரயில்வே போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது கள்ளக்காதலர் அனுராக், அவரது நண்பர்கள் தினேஷ், கமலேஸ்வரன் ஆகியோரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet