Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டி20 உலகக் கோப்பை எப்போது? – முடிவெடுக்க காத்திருக்கும் ஐசிசி..!

0 Comments

Published on: Friday, May 29th, 2020 at 6:10 PM

டி20 உலகக் கோப்பை எப்போது? – முடிவெடுக்க காத்திருக்கும் ஐசிசி..!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்கான ஐசிசி கூட்டம், அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் – நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போட்டியை 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக ஐசிசி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

உலகக் கோப்பை போட்டி குறித்து உறுதியான முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால், கடந்த வியாழக்கிழமை நடைபெற இருந்த இந்த கூட்டம் ஜூன் 10க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பை தள்ளிவைக்கப்பட்டால், ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்

tamilxpressnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet