Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண் டாக்டர் – திட்டமிட்டு கொடூரம் செய்த லாரி ஓட்டுநர்கள்…

0 Comments

Published on: Sunday, December 1st, 2019 at 2:39 PM

ஐதராபாத்தில் பைக் பஞ்சராகி சாலையில் தனியாக நின்ற பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர்-விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பிரியங்கா கால்நடை மருத்துவராக இருந்த நிலையில், இரண்டாவது மகள் பவ்யா விமான நிலைய ஊழியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா, கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு அன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார். ஐதராபாத் அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு சென்ற பிரியங்கா, அதன் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கால் டாக்சி ஒன்றை புக் செய்து, அதன்மூலம் பயணித்துள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த லாரி ஓட்டுநர்கள் சிலர், பிரியங்கா புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் பிரியங்கா திரும்பிவரும் வரை காத்திருந்த அவர்கள், மது போதையிலும் இருந்துள்ளனர்.

இரவு 9 மணி அளவில் தனது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடத்துக்கு வந்த பிரியங்கா, பஞ்சர் ஆகியிருப்பதை பார்த்து என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த லாரி ஓட்டுநர்கள், அவருக்கு உதவுவதாகக் கூறி, இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளனர். பிரியங்கா எவ்வளவோ சொல்லும் அதை கேட்காத அவர்கள் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்ட எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதனால், என்ன செய்வதென தெரியாத பிரியங்கா, அவர்களுடன் சிறிது தூரம் சென்றுள்ளார்.

ஆனால், அவர்களது நடவடிக்கையால் அச்சமடைந்த பிரியங்கா, தன்னுடைய தங்கை பவ்யாவுக்கு போன் செய்த ஐதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே பைக் ரிப்பேர் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி ஓட்டுநர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், அவர்கள் நடவடிக்கை பயமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். தன்னுடன் போனில் பேசிக்கொண்டே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது பைக்கை விட்டுவிட்டு, வேறு ஏதாவது வண்டியில் வருமாறும், காலையில் சென்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவரது தங்கை ஆலோசனை கூறியுள்ளார்.

பிரியங்கா அழைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்த லாரி ஓட்டுநர்கள், அவரது வாயை பொத்தி, அவரது செல்போனையும் பிடுங்கி ஆஃப் செய்துள்ளனர். இதனிடையே பிரியங்காவை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற அவரது தங்கை, செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதை அறிந்து,  வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குறிப்பிட்ட அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அங்கு பிரியங்கா இல்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், மாதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடைசியாக பிரியங்கா நின்று போன் பேசிய இடத்தில் தேடினர். இரவு முழுவதும் அந்த பகுதியில் தேடியும் பிரியங்கா கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாயில் ரங்காரெட்டி மேம்பாலம் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக அவ்வழியாகச் சென்ற பால்காரர் மூலம் சாய் நகர் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் காணாமல்போன பெண்களின் விவரத்தை சேகரித்தபோதுதான், கால்நடை மருத்துவர் பிரியங்கா காணாமல் போன தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவனைக்கு சென்ற பிரியங்காவின் சகோதரி, அவர் அணிந்திருந்த ஸ்கார்ப் மற்றும் விநாயகர் படம் பதித்த தங்கச் சங்கிலியை வைத்து, இறந்தது பிரியங்கா என உறுதி செய்தார். இதையடுத்து பிரியங்காவின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நாராயண பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாஷா, உள்ளிட் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரியாங்காவிற்கு உதவி செய்வதுபோல் நாடகத்தை அரங்கேற்றி, பின்னர் அவரை தூக்கிச்சென்று 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பலாத்காரம் செய்தபோது, பிரியங்கா அதிகமாக முரண்டு பிடித்ததால், வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கழுத்தில் போட்டு இறுக்கி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பிரியங்கா உடலை லாரியில் மூலம் மேம்பாலம் வரை எடுத்துச் சென்று கீழே இறக்கி, லாரியில் இருந்த டீசலை ஊற்றி தீ வைத்து எறித்திவிட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரங்கேறிய மறுநாள் அதே பகுதியில் மற்றொரு பெண் உடலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இவை நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet