0 Comments
Published on: Tuesday, June 2nd, 2020 at 12:53 PM
சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபரின் அருகில் துள்ளிக் குதித்த திமிங்கலம்… பயங்கரமான காட்சி…
மீன் வாங்க சந்தைக்கு போகும்போது பெரிய சைஸ் மீனைப் பார்த்தாலே நமக்கு பிரமிப்பும், பயமும் வந்து விடும். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் அருகில் ராட்சத திமிங்கலமே துள்ளிக் குதித்துள்ளது. ஆனால், அஞ்சாமல் அதன்பின்னரும் அந்த மீனவர் படகைச் செலுத்தி கரை திரும்பியுள்ளார்.
கலிபோர்னியாவின் ஆழ்கடல் பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் படகில் போய் ஹம்பக் வகை திமிங்கலங்களை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சின்ன மீன்பிடிக் படகில் ஒரே ஒரு மீனவர் வலைவிரித்து, மீன்களை பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த மீனவரின் படகில் மிக அருகில், ஹம்பக் வகை திமிங்கலம் துள்ளிக் குதிக்க, அதை திமிங்கல ஆராய்ச்சிக்குப் போன டோக்லஸ் க்ராப்ட் தனது கேமராவில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த சின்ன படகை திமிங்கலம் சேதப்படுத்தவோ, தட்டிவிடவோ செய்யவில்லை. இதனால், மீனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மீனவரும் அச்சப்படாமல் தொடர்ந்து படகை செலுத்தி கரை சேர்ந்தார். பெரிய கப்பல்களே திமிங்கலத்தால் நிலைகுலைந்து விபத்து ஏற்படும் நிலையில், இந்த சிறிய படகில் மீனவர் தப்பியது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Whale Breach Close To Boat https://t.co/T3y7fZO86W via @YouTube
— Tamilxpressnews.com (@Tamilxpressnew1) June 2, 2020
No comments yet