Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நான்ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க… பெண்களே உங்களுக்கான ரகசிய டிப்ஸ்…!

0 Comments

Published on: Wednesday, August 12th, 2020 at 6:46 PM

நான்ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க… பெண்களே உங்களுக்கான ரகசிய டிப்ஸ்…!

எந்தவொரு பொருளும் நீண்டகாலம் உழைத்தால்தான் நமக்கு பயன். அடிக்கடி அதன் ஆயுட்காலம் முடியும்போது, அடிக்கடி நாம் செலவு செய்ய நேரிடுகிறது.

குறிப்பாக, நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்ளாத வகையில் மேற்பூச்சு பூசப்பட்டிருக்கும். பாலிடெட்ரா ஃப்ளூரோ எத்திலீன் (PTFE) என்ற பொருளால் மேற்பூச்சு இருக்கும். அனோடைஸ் அலுமினியம், செராமிக்ஸ், சிலிகான், எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற பிற நான்ஸ்டிக் தவாக்களும் சந்தையில் கிடைக்கின்றன.

இந்த வகையான நான்ஸ்டிக் தவாக்களுக்கு எண்ணெய் தேவையில்லை. குறைந்த அளவு எண்ணெய்யை பயன்படுத்தினாலே போதுமானது. இந்த நிலையில், நான்ஸ்டிக் தவா நீண்டகாலம் நீடிக்க சில குறிப்புகளை காணலாம்.

நான்ஸ்டிக் தவாவில் சமைப்பதற்கு முன்பு எண்ணெய் இடுவோம். ஆனால், இப்படி எண்ணெய் இடுவது உங்கள் உடலில் தேவையற்ற கலோரி சேர்வதற்கு வழி வகுக்கும். எனவே, அதில் எண்ணெய்யை ஊற்றுவதற்கு பதிலாக, எண்ணெய்யில் நனைத்த காகித துண்டை பயன்படுத்துங்கள், இதன்மூலம் நான்ஸ்டிக்கை சுற்றி துடையுங்கள்.

நான்ஸ்டிக் நீண்டகாலம் உழைக்க உலோக கரண்டிகள், கத்தி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் கூர்மையான விளிம்புகள் உங்கள் தவாவின் மேற்பூச்சுகளை உரித்து விடும். எனவே தோசையை திருப்ப மரக்கரண்டி, பிளாஸ்டிக் அல்லது சிலிக்கான் கரண்டிகளை பயன்படுத்துங்கள்.

முதலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் டிஷ் வாஸ் சோப்பை பயன்படுத்தி, மென்மையான ஸ்பான்ச் மூலம் நான்ஸ்டிக்கை சுத்தப்படுத்துங்கள். கருகிய உணவுகள், எண்ணெய் போன்றவை ஒட்டிக் கொண்டு இருந்தால், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். சேதமடைந்த பகுதியில் 15 நிமிடங்கள் சோப்பை தடவி அப்படியே விட்டு விடுங்கள். அதை சுத்தம் செய்த பின், ஒரு காகித துண்டை எண்ணெய்யில் ஊறவைத்து, நான்ஸ்டிக்கின் மேற்பரப்பை துடைக்க வேண்டும்.

நான்ஸ்டிக் தவா போன்றவைகள் குறைந்த மற்றும் மிதமான வெப்ப சமையலுக்கு இணைக்கமானவை. எனவே அதிக வெப்பத்தில் பயன்படுத்தினால், மேற்பூச்சு சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சரியான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்துங்கள். வெப்பநிலையை கண்டறிய அதன் மேல் வெண்ணெய்யை ஊற்றி, அதில் குமிழ்கள் ஏற்பட்டால் வெப்பம் சரியாக இருக்கும். இதுவே வெண்ணெய் எரிந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால், வெப்பத்தை குறைக்க வேண்டும்.

அதேபோல், நான்ஸ்டிக் தவாவில் உணவை அப்படியே வைப்பது பாத்திரத்திற்கு சேதத்தை விளைவிக்கும். அத்துடன், நீண்டநேரம் உணவை அப்படியே வைப்பதால், நான்ஸ்டிக் தவாவின் மேற்பூச்சு வாசனை அடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே உணவை சேமிக்க எப்போதும் சரியான பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

தக்காளி மற்றும் எலுமிச்சை போன்ற அமில உணவுகளை சமைப்பது உங்களது நான்ஸ்டிக் தவாவின் மேற்பூச்சில் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த உணவுகளை சமைக்க வேறு பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால், கண்டிப்பாக நான்ஸ்டிக் தவா மற்றும் இதர நான்ஸ்டிக் பாத்திரங்கள் நீண்ட காலம் உழைக்கும். அடிக்கடி செலவும் ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet