Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இதை செய்தால்போதும்… வெள்ளையான தாடி, மீசை கறுப்பாக மாறும்…

0 Comments

Published on: Monday, August 10th, 2020 at 10:38 AM

இதை செய்தால்போதும்வெள்ளையான தாடி, மீசை கறுப்பாக மாறும்

வெள்ளையான தலைமுடிக்கு டை அடித்து கறுப்பாக மாற்றுவோர், தாடி, மீசையை என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பர். அவர்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் உதவும்.

தாடி. அடர்த்தியாக வளரவில்லையே என்று சிலர் கவலைப்படும் நிலையில், அடர்த்தியான தாடி, மீசை நரைத்து போய்விட்டதே என பலரும் கவலைப்பட்டு வருகின்றனர். அவர்கள் முதலில் ஒரு கின்னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி எலுமிச்சை பழத்தை நன்றாகப் பிழிந்து விட வேண்டும். எலுமிச்சை தாடியை வேகமாக வளர வைப்பதோடு, வெள்ளை முடியையும் கறுப்பாக மாற்றும் திறனுடையது.

இதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலக்க வேண்டும். இதை ஒரு நிமிடம் ஸ்பூனால் நன்றாக கலக்க வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இதில் விட்டமின் சி, புரோட்டீன் ஆகியவை இருப்பதோடு, ஒமேகா 3, 9 ஆகியவையும் உள்ளன. இதோடு, பாதி தக்காளி பழத்தை எடுத்து, சாறி பிழிந்துவிட வேண்டும். தக்காளியில் விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ஸ்ட் அதிகமாக உள்ளது. இப்போது, அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை தாடி, மீசையில் தடவி 5 முதல் 7 நிமிடங்களுக்கு நுனி விரலால் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம். இந்த கலவையால் தோலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. ஒரு முறை செய்த கலவையை பிரிட்ஜில் வைத்து 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet