Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தலைக்கு எண்ணெய் தேய்த்தப் பின் இதையெல்லாம் செய்யக்கூடாது… செய்தால்..?!

0 Comments

Published on: Sunday, August 23rd, 2020 at 10:34 AM

தலைக்கு எண்ணெய் தேய்த்தப் பின் இதையெல்லாம் செய்யக்கூடாது… செய்தால்..?!

தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது இந்த தவறை செய்தால், தேவையில்லாத விளைவுகள் ஏற்படும். ஆகவே அதை தவிர்க்க வேண்டும். என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க…

தலைமுடி கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதே காரணம். அதனால், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வேர்கள் எண்ணெய்யை நன்றாக உறிஞ்சிக் கொண்டு வலுப்பெறும். எண்ணெய்யை தேய்த்துவிட்டு அப்படியே விடாமல், மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி, முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.

பூஞ்சைகள், காற்று மாசுபாட்டால் தலைமுடி சேதமாகுதல், தொற்று, பேன், பொடுகு என தலைமுடியை சேதப்படுத்தும் விசயங்கள் பல உள்ளன. இதற்கு ஒரே தீர்வு தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான். இதைத் தொடர்ந்து சரியாகச் செய்து வர முடிப் பிரச்சனை இருக்காது. தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும். பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.

தலையில் பொடுகு வருவதற்கு, தலைமுடி வறட்சியும் முக்கிய காரணம். இன்று பொடுகு தொல்லைஅயல் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். அதற்கு எண்ணெய் வைக்காதது முக்கிய காரணம். தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்குகிறது. பொடுகுத் தொல்லையும் இருக்காது.

தலையில் எண்ணெய் தேய்த்த உடனே தலைமுடியை சீவ வேண்டாம். குறிப்பாக சிக்குகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் தலைமுடி சேதமடைய வாய்ப்பு உள்ளது. தலையில் பல மணி நேரத்திற்கு எண்ணெய்யை அப்படியே விடக் கூடாது. அப்படி செய்தால், அது முடியில் அதிகம் அழுக்கு சேர வழிவகுக்கும்.

அளவிற்கு அதிகமாக எண்ணெய்யை முடிக்கு தேய்க்கக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால், அதிக அளவு ஷாம்பூவை பயன்படுத்திய சூழல் ஏற்படும். இதனால், தலைமுடி வறட்சியால் பாதிக்கப்படும். தலைமுடியை இறுக்கிக் கட்டக் கூடாது. எண்ணெய் தேய்த்த பின் சற்று தளர்வாகவே முடியை விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet