Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தொங்கும் காதுகளை வலியில்லாமல் சரி செய்ய… இரவு தூங்கும்போது இதை செய்யுங்க…

0 Comments

Published on: Saturday, August 29th, 2020 at 10:04 AM

தொங்கும் காதுகளை வலியில்லாமல் சரி செய்ய… இரவு தூங்கும்போது இதை செய்யுங்க…

பெரிதான துவாரங்களை மறைக்க சிலர் நிறமற்ற டேப்புகளைக் கொண்டு தற்காலிமாக ஒட்டிவிடுவதுண்டு. இது நல்ல முறையல்ல. சில மணிநேரத்திற்கு அவ்வாறு ஒட்டுவதால் பிரச்சனை ஏற்படாது. நீண்ட நேரம் ஒட்டினால் அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு பெரிய பிரச்சனையாக மாறும் ஆபத்து உண்டு.

அவ்வாறு இல்லாமல் இலகுவான அறுவைச் சிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்து நிரந்தரமாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம். இதைச் செய்வதற்கு அறுவைச் சகிச்சைக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. அதேபோல பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களை நாட வேண்டியதும் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தமது ஆலோசனை அறையோடு இணைந்த சிறு அறுவைச் சிச்சை அறையில் வைத்தே செய்துவிடுகிறார்கள். மயக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரக்கச் செய்தல் போதுமானது.

துல்லியமும் நயமும் இணைந்த நுணுக்கமான சிகிச்சை இது. மென்மையான உறுப்பு என்பதாலும், காதின் அழகைக் கெடுக்கக் கூடாது என்பதால்தான் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்வதற்கான ஊசியை ஏற்றுவார்கள். அறுந்த அல்லது பிரிந்து துவாரத்தைச் சுற்றியுள்ள இடத்தைக் கீறி, மறுத் திசுக்களை அகற்றிய பின்னர் வெட்டிய அவ்விடத்தைப் பொருத்தி நுண்ணிய நூலால் தையல் இடுவார்கள். ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.

காயத்தை மூடி காதில் பேண்டேஜ் போடுவார்கள். சுமார் ஒரு வார காலத்திற்கு பின் தையலிட்ட நூலையும் பேண்டேஜையும் அகற்றிவிடலாம். இடைப்பட்ட காலத்தில் அது நனையாமல் இருப்பது அவசியம். சுமார் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தை நனைக்கக் கூடாது என்பதால் முகம் கழுவும்போது பேண்டேஜில் நீர் படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

தலைமுடியைக் கழுவி சுத்தமாக்கிய பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு செல்வது உசிதமானது. அக்காலப் பகுதியில் தலைக்கு எண்ணெய் தடவாதிருப்பதும் நல்லது. பேண்டேஜ் போட்டு காயத்தை மூடாது திறந்தபடி விட்டபடி ஆண்டிபயோடிக் ஆயின்மெண்ட் பூசி தையலிட்ட காயத்தை மாற வைக்கும் முறையும் உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

பொதுவாக முன்னைய துவாரத்தை முழுமையாக மூடி விடுவார்கள். பழைய இடத்தில் சிறிய துவாரத்தை மிச்சம் விடுவதில்லை. அறுவைச் சிகிச்சை செய்த இடம் முழுமையான உறுதி இல்லாமல் இருப்பதால் அதேயிடத்தில் மீண்டும் தோட்டை அணிந்தால் மடலின் திசுக்கள், தேய்ந்து மீண்டும் துவாரம் பெரிதாகாமல் இருப்பதற்காகவே முழுமையாக மூடுவார்கள்.

புதிதாகத் துவாரம் இடுதல்

சுமார் 1 மாத காலத்தின் பின்னர் புதிய துவாரம் இட வேண்டி நேரும். புதிய துவாரத்தை பழைய இடத்திற்கு அருகில் அவரது விருப்பதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். அவ்விடத்தை மரக்கச் செய்ய மருந்து பூசி செய்யலாம் அல்லது விறைப்பதற்கான ஊசி மருந்தும் போடலாம். தோட்டு நுனியில்  துளையிடுவதற்காக அதன் தண்டில் சிறிய கூர் உள்ள பாரமற்ற தோடுகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். வேறு ஊசிகளால் துவாரமிட்டு அதில் தோட்டை அணியவும் முடியும்.

ஆயினும் மெல்லிய தண்டுள்ள பாரமற்ற தோடுகள் விரும்பப் படுகின்றன. பாரமற்ற காது வளையங்களும் சிறந்தது. குத்திய உடன் குருதி கசியும், காயம் இருக்கும் போதே, தோடு அணிவதால் சிலருக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. தோட்டில் உள்ள உலோகங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதைத் தடுப்பதற்காக துவாரம் இடப்பட்டதும் உடனடியாகத் தோடு அணிவதை தவிர்த்து துவாரத்தில் சிறிய நைலோன் நூலைச் செலுத்தி முடிந்து வைப்பதும் உண்டு. புண் நன்கு காய்ந்த பின் தோடு அணிந்தால் ஒவ்வாமை ஏற்படாது.

ஒரு மாதம் காத்திருக்க முடியாது. ஒரு வாரத்தில் திருமணம் ஒன்று இருக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சி உள்ளது பலர் அவசரப்படுவார்கள். அவர்கள் அழுத்தக்கூடிய வகையிலான தோடுகளை தற்காலிகமாக அணிய வேண்டியதுதான்.

வேறு பிரச்சனைகள்

காது மடல் பெரிதாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பிலேயே பெரிதாக இருந்து வளரும்போது மேலும் பருத்திருக்கும். சிலருக்கு அதில் சதைகள் மடிப்புற்று அழகைக் கெடுக்கும். சமுத்திரத்தில் மணற் துளியைப் போட்டதுபோல பெரிய மடிந்த காதில் காதணி மறைந்து விடுகிறது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அப்படியான காதின் அளவைச் சிறிதாக்கவும் அறுவைச் கிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை அதற்கான அறுவைச் சிகிச்சை நிபுணர்களே செய்வது நல்லது.

குறிப்பாக, பெரிய தோடு அணிவோர் இரவு தூங்குவதற்கு முன்பு அதை கழற்றி வைத்து விட்டு தூங்க வேண்டும். வெளியில், வீட்டில் இருக்கும்போது வெறும் காதுடன் இருக்கப் பிடிக்காவிட்டால், சிறிய தோடுகளை அணியலாம். வெளியில் செல்லும்போது மட்டும் பெரிய தோடுகளை அணிந்து செல்லலாம். நாள்தோறும் தூங்கும்போது பெரிய தோடுகளை கழற்றி வைப்பதால், பெரும்பாலான காது பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet