0 Comments
Published on: Saturday, August 29th, 2020 at 10:35 AM
தூங்கும்போது குறட்டையைத் தவிர்க்க… பகலில் இதை செய்து விடுங்கள்…
தூங்கும்போது குறட்டை விடுபவர்களுக்கு எளிமையான வீட்டு வைத்தியங்களே போதும். அதை செய்தால் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.
குறட்டை விட்டுத் தூங்கினால் அவர் ஆழ்ந்து தூங்குகிறார் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அந்த எண்ணம் தவறானது. அவ்வாறு வரும் குறட்டை ஆபத்து என நினைவில் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டாமல் அதன் காரணத்தை ஆராய்ந்து சரி செய்யுங்கள். சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2017ல் பயோடெக்னாலஜி தேசிய தகவல் மையம் வெளியிட்ட ஆய்வில், பகலில் நீண்ட நேரம் நின்றிருந்தாலோ அல்லது அமர்ந்த இடத்திலேயே கால்களை அசைத்துக் கொண்டிருந்தாலோ இரவு தூங்கும்போது குறட்டையைத் தவிர்க்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தூங்கும்போது குறட்டை விடும் 16 பேரை ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்கள், அவர்களின் கால் மூட்டுக்குப் பின் பகுதியில் கெண்டைக்காலில் சுரக்கும் நீரின் அளவை கணக்கிட்டுள்ளனர். பின்னர் அவர்களை நான்கு மணி நேரம் அமர வைத்ததோடு, அதில் பாதி பேரை பெடலில் வைத்து கால்களுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்துள்ளனர். மற்றவர்களை அப்படியே அமர வைத்தனர். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்யச் சொல்லி அவர்களின் தினசரி இரவுக் குறட்டையை கண்காணித்துள்ளனர்.
இதில், அமர்ந்தபடி பெடல் செய்தவர்களுக்கு குறட்டை விடுவதன் அளவு குறைந்ததைக் கண்டறிந்துள்ளனர். நாளுக்கு நாள் அவர்களுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது முட்டிக்குப் பின் பகுதி கெண்டைக்கால் முதல் கணுக்கால் வரையிலான இடத்தில்தான் தொண்டைக்கான காற்று செல்கிறது. இங்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தால், அதன் மூலம் உடலுக்குள் ஆக்சிஜன் அளவு அதிகரித்து தொண்டையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வுகளால் உண்டாகும் குறட்டையும் குறைகிறது. எனவேதான் கணுக்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்தனர்.
எனவே ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால், கால்களுக்கு அசைவு கொடுக்கும் அல்லது காலை ஆட்டும் எளிமையான பயிற்சியை செய்யுங்கள். குறட்டைக்கு தீர்வு கிடைக்கும்.
No comments yet